மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்கள்..
நடிகர் விஜய்க்கு வரும் 22 ஆம் தேதி (நாளை மறுநாள்) பிறந்த நாள்.
இதையொட்டி மதுரை நகரம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
‘’நாளைய தமிழகம்’’ ‘’ தமிழர்களின் பாதுகாவலர்’’ என்றெல்லாம் விஜயை வர்ணித்து அந்த போஸ்டர்களில் வாசகங்கள் உள்ளன.
சில போஸ்டர்களில் விஜய் படத்துடன் சிவாஜி கணேசன் மற்றும் கமலஹாசன் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
ஆனால் கமலஹாசனின் சமகால தோழரான ரஜினிகாந்த் புகைப்படம் எதுவும், இந்த போஸ்டரில் இடம் பெறவில்லை.
‘’ எங்களுக்கு ரஜினிகாந்த் முக்கியம் இல்லை.எனவே அவர் புகைப்படத்தை எங்கள் போஸ்டரில் போடவில்லை’’ விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
‘’இப்போது தியேட்டர்கள் அடைக்கப்பட்டுள்ளன. எனவே விஜய் பிறந்த நாளுக்கு இந்த போஸ்டர்கள் ஒட்டுவதன் மூலம் மகிழ்ச்சி கொள்கிறோம்’’ என மதுரை விஜய் ரசிகர்கள் கூறினர்.
கொரோனாவால் மக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ள நிலையில், விஜய் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்கள், மதுரை மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
–பா.பாரதி