கமதாபாத்

ரசு சார்பில் நடத்தப்படும் நவராத்திரி கொண்டாட்டங்கள் இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார்.

 

அடுத்த மாதம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையின் போது குஜராத் மாநிலத்தில் அனைவரும் கூடி கர்பா என்னும் ஆட்டம் ஆடி மகிழ்வார்கள்.

மாநில அரசு இதற்கான ஏற்பாடுகள் செய்து நடத்துவதும் உண்டு.

தற்போது கொரோனா பரவுதல் காரணமாகக் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி இந்த வருடம் குஜராத் மாநிலத்தில் அரசு சார்பில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறாது என முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

மேலும் அரசின் உத்தரவையொட்டி மாநிலம் முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறாது எனத் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.