டிச.26;ல் பதவி ஏற்பு: குஜராத் முதல்வராக விஜய் ருபானி மீண்டும் தேர்வு!

காந்திநகர்,

குஜராத் மாநில முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானி வரும் 26ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

பதவியேற்பு விழா, காந்தி நகரில் உள்ள சச்சிவலயா மைதானத்தில் வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், 99 இடங்களில் வெற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜக 6வது முறையாக ஆட்சி பீடம் ஏறுகிறது.

குஜராத் மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக மேலிட பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் ரூபானி  ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன்  நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனை, நிதியமைச்சரும், பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அருண் ஜேட்லி அறிவித்தார்.

பதவியேற்பு விழா, காந்தி நகரில் உள்ள சச்சிவலயா மைதானத்தில் வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.