தெலுங்கு மெர்சலுக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது

சென்னை:

மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங்-ஆன அதிரிந்தி படத்துக்கு எந்தக் காட்சிகளையும் நீக்காமல் சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது.

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து கிண்டலாக விமர்சிக்கப்படுவதாகக் கூறி தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் மெர்சல் டப்பிங் செய்யப்பட்டது.  இதில்  ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க சென்சார்போர்டு வலியுறுத்தியதாகவும் இதை ஏற்று காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் அக்டோபர் 27-ந் தேதி அதிரிந்தி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படவில்லை  என கூறிய தயாரிப்பு நிர்வாகம்,  படம் வெளியிடுவதை தள்ளிவைத்த்து.

இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகி ஹேமா ருக்மணி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், அதிரிந்திக்கு தணிக்கை சான்ரிதழ் அளிக்கப்பட்டுவிட்டதாக பதிவிட்டுள்ளார். சென்னை மண்டல அதிகாரி மதியழகன் இச்சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் தெலுங்கில் அதிரிந்தி விரைவில் வெளியாகும் என்றும்  ஹேமா ருக்மணி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

.