விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

சென்ற மாதம் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதே நேரத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ருபாய் பணம் சிக்கியது.

இந்நிலையில் இன்று காலை சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சென்ற மாதம் நடத்தப்பட்ட சோதனையில் பூட்டப்பட்ட லாக்கர்கள் மற்றும் அறைகளில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது என கூறியுள்ளனர்.

மேலும் விஜய் பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களுக்குகாக வாங்கிய சம்பளம் பற்றிய விவரத்தையும் வெளியிட்டுள்ளனர். பிகில் படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக 80 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

விஜய் சம்பளம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் என சில மாதங்கள் முன்பு செய்திகள் பரவியது. இந்த நிலையில் தான் இப்போது அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.