விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் கோரிய மன்னிப்பு….!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் உருவாக இருந்தது. இத்திரைப்படத்தில் முரளிதரன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இலங்கை வாழ் தமிழர்கள், பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துகளைப் பதிவுசெய்திருந்தனர்.

இதனிடையே ட்விட்டரில் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்திருந்தார். @ItsRithikRajh என்ற ஐடியில் உள்ள அந்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் குமரன் சென்னை காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் ஐபி முகவரி உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்தனர்.

அப்போது அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கினர். இந்நிலையில் தற்போது அந்த இளைஞரை இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் .

நன்றி – IBC Tamil

ஒரு காலத்தில் வேலையின்மை காரணமாகவும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் இவ்வாறு செய்துவிட்டதாகவும், ஒரு சகோதரனைப் போல் எண்ணி தன்னை மன்னித்துவிடுமாறும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கைவைத்துள்ளார்.