சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதிக்கு விருது

சென்னையில் நடைப்பெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது!

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கிய 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா டிசம்பர் 14 முதல் 21-ஆம் நாள் வரை நடைப்பெற்றது.

இத்திருவிழாவில் சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டது.

இந்த விழாவினில் 84 உலக சினிமாக்கள், 11 இந்திய பனோரமா, 1மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா, இப்படை வெல்லும் ஆகிய 13 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.

இவ்விழாவினில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான போட்டியில் “ஒரு கிடாயின் கருணை மனு” தேர்வாகி வெற்றியடைந்துள்ளது.

2-வது இடத்தினை விக்ரம் வேதா படம் பெற்றது. தேர்வுக்குழுவினரின் சிறப்பு விருது மாநகரம் படத்துக்குக் கிடைத்தது.

மேலும் அமிதாப் பட்சன் யூத் ஐகான் அவார்ட் நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vijay Sethupathi felicitated with Amitabh Bachchan Youth Icon award at Chennai International Film Festival, சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதிக்கு விருது
-=-