பிரபல காமடி நடிகருக்கு நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி….!

ஆதித்யா டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த காமெடி நடிகர் லோகேஷ் பாப் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என கூறி அவரது நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

லோகேஷ் உள்ள நிலைமை பற்றி அறிந்து விஜய் சேதுபதி சற்றுமுன் நேரடியாக மருத்துவமனை சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும் மருத்துவ செலவிற்காக பணம் கொடுத்துள்ளார் அவர்.