’சீதக்காதி’ ஆதிமூலமாக நடித்த விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை!

--

சீதக்காதி திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை எக்ஸ்பிரஸ் அவென்யுவில் மெழுகு சிலையாக வடிவமைத்துள்ளனர்.

statue

தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ‘சீதக்காதி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய சேதுபதியின் காதாபாத்திரம் ஆதிமூலம். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ட்ரெய்லரில் ஆதிமூலம் ஐய்யாவை அனைவரும் எதிர்ப்பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து ஆதிமூலமாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பதாபாத்திரத்தை காண ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யுவில் முதல் முறையாக மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இது திரைப்பட வரலாற்றில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது.