இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி…..!

இந்தித் திரையுலகில் நாயகியை முன்னிலைப்படுத்தி வரும் கதாபாத்திரங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி.

தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார்.

டாப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.