லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ திரைப்படம் சமீபத்தில் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது .
இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள். இரண்டு ஹீரோக்களில் ஒரு கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது .
அதேபோல் இந்த படத்தில் ரெஜினா நடித்த நாயகியாக பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனேகமாக காத்ரீனா கைஃப் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் விஜய் சேதுபதியும் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.