முத்தையா முரளிதரன் பயோபிக்லிருந்து விஜய் சேதுபதி விலகவில்லை….!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார் ..

தார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு தமிழீல ஆதரவாளர்கள் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களிடத்தில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ் ஈழத்துக்கு எதிராக இருந்த முத்தையா முரளிதரன் அவர்களின் பயோபிக்கில் நடிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், படத்துக்கு ‘800’ என்றே தலைப்பிடவும் முடிவு செய்துள்ளனர்.