ரஜினிகாந்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில், ரஜினிக்க வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கி இருந்த பொது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஏற்கனவே நடித்து வந்த  காலா மற்றும் 2.0 ஆகிய படங்கள் முடிவடைந்து, காலா படம் வரும் ஏப்ரலில் வெளிவர உள்ள நிலையில்,  தனது அரசியல் கட்சி தொடங்க கால தாமதம் ஆகும் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கூறிய நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் நடிகர்கள் குறித்து தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது உண்மையா அல்லது வதந்தியா  என்பது குறித்து, பட தயாரிப்பு நிறுவனமோ, இயக்குனரோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி