விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓ மை கடவுளே படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. படத்தின் ஹீரோ அவர் இல்லை

ஓ மை கடவுளே பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, அஜித் சார் படத்தில் நடிக்க பல காலமாக காத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். அது வில்லனாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று தெரிவித்துள்ளார்.