ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமல்ஹாசனுக்கும் வில்லனாகும் விஜய் சேதுபதி….

ரும் 2021ம் ஆண்டின் கொண்டாட்ட மான படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாவதாக இருந்தது. அண்ணத்த படப்பிடிப்பு முடியாமலிருப்பதால் ரஜினிகாந்த்தால் கமல் படத்தில் நடிக்க முடியவில்லை.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலே நடிக்க முடிவு செய்தார். ரஜினிக்காக உருவான கதை யிலேயே மாற்றங்கள் செய்து அதில் கமல் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தென் மாவட்ட கிராமங்களின் பின்னணியில் கதை நடப்பதுபோலவும் பின்னால் அது நகரத்து பின்னணியுடன் அரசியல் கதைக்களமாகவும் அமைக் கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கமலின் தேவர் மகன்2 ம் பாகத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக சில மாதங் களுக்கு முன் தகவல் வந்தது. தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத் தில் நடிப்பதால் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கமல் தரப்பிலிருந்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை யென்றாலும் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அந்த கூட்டணி கமல் படத்திலும் இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்தார். அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது கமலுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.