தெலுங்கு படத்தில் மெகா ஸ்டார்களுடன் இணையும் விஜய் சேதுபதி!

தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நடிகர் விஜய் சேதுபதி, பிரபல மெகா ஸ்டார்களுடன் இணைந்து நடிக்க இருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘சைரா’ படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில், அவருடன் பிரபல இந்தி மெகா ஸ்டார் அமிதாப், கன்னட பிரபல நடிகர்  சுதீப் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் அந்த படத்துக்கு சைரா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். முக்கியமான கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி யும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vijay Sethupathi joins mega stats in Telugu film!, தெலுங்கு படத்தில் மெகா ஸ்டார்களுடன் இணையும் விஜய் சேதுபதி!
-=-