‘பிகில்’ படத்தை முடித்துவிட்டு, அக்டோபரில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.வி.கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஜனவரி 2020-ல் முழுப் படப்பிடிப்பையும் முடித்து, கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..