விஜய்க்கு அன்பு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி….!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .
இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்புத் தளத்தில் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளது படக்குழு. அப்போது சதீஷ் குமாருக்கு அன்பாக முத்தம் ஒன்றைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

இதனைக் கவனித்த விஜய், தனக்கு முத்தம் கொடுக்குமாறு கிண்டலாகக் கேட்டுள்ளார். உடனே விஜய்யைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.