ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதியின் ‘லுக்’ வெளியீடு

ஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் கேரக்டர் சம்பந்தமான படத்தை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.

சமீபத்தில் வெளியாக வசூலை வாரி குவித்து வரும் 2.0 படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியா 2 கதாநாயகிகளாக  சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும்,  பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பாடல்கள்  டிசம்பர் 9-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை போஸ்டர் வழியாக வெளியிட்டுள்ளது படக்குழு.

பேட்ட படத்தில் ‘ஜித்து’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் அவர் இருப்பது போன்று போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.

விஜய் சேதுபதி கதாபாத்திரப் பின்னணியில் ரஜினி நடித்து வருவது போன்றும் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை  ‘மரணமாஸ்’  பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது விஜய் சேதுபதியின் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.