‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ இந்தி ரீமேக் தயாராகி வருகிறது. அட்வாயித் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஆமிர் கானுடன் கரீனா கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

ஆமீர்கானுடன் நடிப்பதால் அவருடைய உடல் எடையை போன்று தனது உடலமைப்பை மாற்ற முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்றது enbathu குறிப்பிடத்தக்கது