பொங்கலை முன்னிட்டு விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நேற்று நடிகை குஷ்புவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுள்ளார். அப்போது விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார். வீட்டு சாப்பாட்டுடன் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டோம். ஒரு சாதாரண நாளை சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய். நிறைய அன்பு அத்துடன் குட் லக் என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.