வெப் சீரியலாகும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு : விஜய் சேதுபதிக்கு வாய்ப்பா?

சென்னை

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக எடுக்க இயக்குநர் ரமேஷ் முன்வந்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் இன்றும் தங்கள் தலைவராகக் கொண்டாடி வருபவர் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆவார்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்க ஏ எம் ஆர் ரமேஷ் முன் வந்துள்ளார்.

ரமேஷ் ஏற்கனவே வீரப்பன் வாழ்க்கை மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கை திரைப்படமாக எடுத்துள்ளார்.

தற்போது பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை எடுக்க முன் வந்துள்ளார்.

இந்த தொடரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி எதிர்ப்பு காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கதாகும்.