விஜய்சேதுபதி படம் ஒ டி டி தளத்தில் ரிலீஸ்?

விஜய்சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் க.பெ.ரணசிங்கம். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந் தனர். எல்லா படங்களும் போல் இப்படமும் கொரோனா லாக்டவுனில் முடங்கிவிட்டடது.

சினிமா படப்பிடிப்பே எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில் தியேட்டர்கள் ஆகஸ்ட்டிலாவது திறக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் க.பெ.ரணசிங்கம் படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய எண்ணியிருக்கின்றனர்.
இதுகுறித்து ஒடிடி தளத்தினருடன் பட தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகின் றனர். சரியான விலை கிடைக்கும் பட்சத்தில் ஒடிடியில் படம் வெளிவருவது உறுதியாகிவிடும் என்று தெரிகிறது. கடந்த வாரம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கொரோனா லாக் டவுனில் முதல் படமாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
கொரோனா சினிமாவுலகுக்கு கெடுதல் செய்யும் நிலையில் ஒ டி டி தளங்களுக்கு அட்சயபாத்திரமாக மாறியிருக்கிறது.
#