விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதானா?

ரமான திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் சீனுராமசாமி. இன்னொரு பக்கம் தனது சிறப்பான நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களுக்குப் பிறகு  நான்காவது முறையாக மீண்டும் இணைகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் தயாரிப்பில்  உருவாகும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14-ம் தேதியன்று தேனியில் துவங்கியது.

விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நாயகியாக நடிக்கிறார்.  ஒளிப்பதிவாளர் சுகுமார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார்.

இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

இந்த படத்துக்கு ‘தயாரிப்பு எண்-2’ என்ற தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று இயக்குநர் சீனுராமசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் படத்துக்கு “கார்க்கோடகன்” என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்க்கோடகன் என்பது புராணங்களில் வரும் பாம்புகளின் அரசனி்ன் பெயர்.

படப்பிடிப்பு துவக்க விழா

இதையடுத்து கதை பற்றிய யூகங்கள் கிளம்பியுள்ளன.

சிலர், “சுற்றுப்புறச் சூழலுக்கு பாம்புகள் மிக அவசியம். மனிதர்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு பாம்புகள் நண்பன். வயல் கதிர்களை திண்று தீர்க்கும் எலிகள் போன்றவற்றை உணவாகக் கொண்டு விவசாயத்தைக் காப்பதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. தவிர 99 சதவிகித பாம்புகளுக்கு விசம் கிடையாது. ஆனால் பாம்பு என்றாலே பயந்துபோய் அடித்துக்கொல்வது மனிதர்களின் வழக்கமாக இருக்கிறது.  ஆகவே பாம்புகள் அவசியம் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக “கார்க்கோடகன்” இருக்கும்” என்று கூறுகிறார்கள்.

வேறு சிலர், “அப்பாவி பாம்புகளை மனிதர்கள் புரியாமல் அடித்து துன்புறுத்துவது போல, பாவப்பட்ட ஒரு நல்ல மனிதனை இந்த சமுதாயம் எப்படி துன்புறுத்துகிறது என்பதை சொல்லும் படம்” என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக படத்தின் பெயரை அறிவிக்கவில்லை.