லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் .. சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் 2020 கோடைவிடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் .

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான தகவல் , இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதி ரூ.10 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .