அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்….!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் ‘புஷ்பா’.இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.ஆனால், இந்தப் படத்திலிருந்து தற்போது விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு இறங்கியுள்ளது.