எஸ்.பி.பிக்கு படப்பிடிப்பு தளத்தில் இறுதி மரியாதை செலுத்திய படக்குழு….!

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி, உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் எஸ்.பி.பி காலமானார் .

ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

SPB-யின் பண்ணைவீட்டில் அவரது இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெற்றது. தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/pavendh1243/status/1309787879741231105

இந்நிலையில் ஜெய்ப்பூரில் ஷூட்டிங்கில் இருந்ததால் எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கிற்கு வரமுடியாத ராதிகா , விஜய்சேதுபதி,டாப்ஸீ, உள்ளிட்ட படக்குழுவினர் , ஷூட்டிங் நடக்கும் இடத்திலேயே எஸ்.பி.பி யின் படத்திற்கு மலர் தூவி , தங்கள் இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.

You may have missed