தமிழ் மொழி தாண்டி மற்ற மொழி படங்களிலும் தலை காட்டி வருகிறார் விஜய் சேதுபதி .தற்போது மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் உப்பேனா என்ற தெலுங்குப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராயாணம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று படக்குழுவினர் உப்பேனா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளிப்படுத்தினர்.

இன்று வெளியிடப்பட்ட புதிய போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு காட்டன் சட்டை மற்றும் வெள்ளை வேட்டியுடன் சிகரெட் புகைப்பதாக உள்ளது .