நாடாளுமன்ற தேர்தல்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்சேதுபதி நடித்த குறும்படங்கள் வெளியீடு…

சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலையொட்டி வாக்களிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்த குறும்பங்களை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குறும்படங்களை வெளியிட்டார்.

விஜய சேதுபதி , விவேக் நடத்துள்ள விழிப்புணர்வு குறும்படம் மற்றும் இந்திய விளையாட்டு வீரர் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் தம்பதியின் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாஹு, மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திரைத்துறையினரை அணுகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு அறிக்கை அளிப்பார்கள் என்றும் அதுகுறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டால் மட்டுமே, எஞ்சிய 3 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து, முடிவெடுக்கப்படும் என விளக்கமளித்தார்.

கார்ட்டூன் கேலரி