விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

ஒரு நாள் அவரிடம் ஏன் சார் பேசவே மாட்டிக்கிறீர்கள் எனக் கேட்டேன். நான் யார் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். அதுவொரு நல்ல பாடம். முதலில் நானும், அவரும் இருக்கும் போட்டோ ஷுட் நடந்தது. அவருடைய படங்கள் பார்த்திருக்கிறேன்.விஜய் சாருடன் பணிபுரிந்த அனுபவம் ரொம்பவே அழகானது.

ஒவ்வொரு காட்சிக்கும் அவரது சிறு சிறு ரியாக்‌ஷன் ரொம்பவே பிடிக்கும். அவருடன் நடித்தது ரொம்பவே அற்புதமான, அழகான அனுபவம். அது அவருக்கு முத்தம் கொடுக்கும் போதே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். விஜய் சாரிடம் என்ன கற்றுக் கொண்டேன் எனக் கேட்டீர்கள் என்றால், ரொம்ப அற்புதமான மனிதர். ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள். சூப்பராக அழகாக இருக்கிறீர்கள்.என கூறினார்