விஜய் சேதுபதி – ஸ்ருதி ஹாசன் இணையும் ” லாபம் “…!

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ், 7CS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘லாபம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கியது. படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.