சூர்யாவுக்கு ‘சிறப்பு’ ஆதரவு தெரிவித்த விஜய்சேதுபதி

சென்னை:
மீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, கோயில்களை பராமரிக்க செலவு செய்வது போல் பள்ளி, மருத்துவமனைகளை சீரமைக்கவும் செலவிட வேண்டும் என கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா விளக்கம் அளித்திருந்தார்.

பள்ளி, மருத்துவமனைகள் இறைவன் உறையும் இடமாக கருதவேண்டும். மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம். அறிஞர்கள், விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியோர்கள் எண்ணங்களை பின்பற்றி, வெளிப்படுத்திய கருத்தில் மிக உறுதியாக உள்ளோம். தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை என அவர் அறிக்கை வாயிலாக சூர்யா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் கருத்து ‘சிறப்பு’ என தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார்.