Random image

விஜய் சேதுபதி, தமன்னா படம் 2ம் பாகத்துக்கு, ’நான் ரெடி, நீங்க ரெடியா?’ நடிகர், தயாரிப்பாளர் கேட்கிறார்..

விஜய் சேதுபதி. தமன்னா ஜோடியாக நடித்த படம் தர்மதுரை. இதில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டில் சீனுராமசாமி இயக்கத் தில் இப்படம் உருவானது.இது வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.


தர்மதுரை படத்தின் நான்கு வருட நிறைவை யொட்டி இயக்குனர் சீனு ராமசாமி தனது அனுபவத்தை பகிர்ந் தார். அதைக்கண்டு ராதிகா போன்ற வர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தி ருந்தனர். படத்தில் ஒரு பாடலுக்கு நடித்த வரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் இயக்குனர்களுக்கும் படத்தில் நடித்தவர்களுக்கும் சேர்த்து, ’தர்மதுரை 2 தயாரிக்கலாமா? நான் ரெடி நீங்க ரெடியா’ என கேட்டிருக் கிறார். இதையடுத்து தர்மதுரை படத் தின் 2ம் பாகம் உருவாகும் என தகவல் பரவிவருகிறது.