ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ்க்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி….!

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் தனக்கென ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கினார்.

தனக்கென தனிபாதை வகுத்து பயணிப்பவர் விஜய் சேதுபதி.

தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்துள்ளார்.

தனது ரசிகர்கள் மற்றும் ட்விட்டரில் பின் தொடர்பவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, கையில் ‘ஒ’என்ற எழுத்துடன் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை சீனுராமசாமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.