விஜய் சேதுபதி தற்போது வெப் சிரீஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வெப் சீரிஸை அமேசான் ப்ரைம் தயாரிக்கிறது. இந்த தொடரில் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாஹித் கபூருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு 2021-ல் துவங்கவுள்ளதாம். பான் இந்தியா தொடராக உருவாக்குவதற்கு தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் தேவை என்பதால் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

தி பேமிலி மேன் என்ற வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இந்த வெப்சீரிஸை இயக்க உள்ளனர்.