விமல் படத்துக்கு வசனம் எழுதுகிறார் விஜய்சேதுபதி..

டிகர் விஜய்சேதுபதி ஹீரோ என்ற வட்டத்துக்குள் நின்று விடாமல் எதிர்மறை கதாபாத்திரங்களையும் தொடர்ந்து செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.

இதற்கிடையில் தன்னை எழுத்தாள ராகவும் அடையாளம் காட்டிக்கொள் கிறார். ஏற்கனவே ஆரஞ்மிட்டாய் படத்துக்கு வசனம் எழுதினார். அதேபோல் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் படத்துக்கு வசனம் எழுத ஒப்புக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி அடுத்த தனது நண்பர் நடிகர் விமலின் குலசாமி படத்துக்கும் வசனம் எழுத ஒப்புக்கொண்டிருகிறாராரம்.
விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் நடிப்பதுடன் துக்ளக் தர்பார், புஷ்பா (தெலுங்கு) உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.