கமலின் ‘விக்ரம்’ படத்தில் வில்லன் ஃபகத் பாசிலா, விஜய் சேதுபதியா…?

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

கமல்ஹாசனுடன் மிக முக்கியமானக் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது .

அவரைத் தொடர்ந்து கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நடிப்பதற்கு லாரன்ஸ் ஆர்வம் காட்டிவருகிறார். ஆகையால், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்பட்டது.

திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொள்ள, தற்போது பகத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்த செய்தி உறுதி செய்யப்படாத நிலையில், விக்ரமில் கமலுடன் நடிப்பதாக பகத் பாசில் தெரிவித்தார். நேற்று பேட்டியளித்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், படத்தில் நடிக்கிறேனா என்பதை இப்போது சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது என்றார்.