விஜய் சேதுபதி நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு தயாராகும் இந்த படத்தில் சூரி, பலூன் வியாபாரியாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்து முடிந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்திலேயே விஜய் சேதுபதி நடித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் கைவசம் நிறைய படங்கள் இருந்ததால் நடிக்க இயலவில்லை.
இந்த படத்தை முடித்து விட்டு, வெற்றிமாறன், சூர்யா

நடிக்கும் ’’வாடிவாசல்’’ படத்தை டைரக்டு செய்ய உள்ளார்.

– பா. பாரதி