நாளை வெளியாகிறது விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ First லுக் போஸ்டர்..!

--

தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’ .

விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது சன் டிவி.

படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சமீபத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கியது. 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், மீதம் உள்ள 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/7screenstudio/status/1280106628172394497

தற்போது இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .