முத்தையா முரளிதரன் பயோபிக்லிருந்து விலகினாரா விஜய் சேதுபதி….?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார் ..

தார் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எம் எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாக இருந்த இப்படத்தில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க விஜய் சேதுபதி ஆவலாக தான் இருந்தார்.

இந்த நிலையில் தமிழீல ஆதரவாளர்கள் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களிடத்தில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ் ஈழத்துக்கு எதிராக இருந்த முத்தையா முரளிதரன் அவர்களின் பயோபிக்கில் நடிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் சேதுபதி தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி