எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி…

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த அனுமதி…

பிரபல இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனைகளில் நடந்து வருகிறது.

விஜய்சேதுபதி- டாப்சி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில்  ராதிகா சரத்குமார், யோகிபாபு,ராஜேந்திர பிரசாத், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இங்குள்ள சிட்டி பேலஸ் அரண்மனையில் ஷுட்டிங் நடத்த அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது.

கடைசியாக எம்.ஜி..ஆர்- ஜெயலலிதா நடித்த ’அடிமைப்பெண்’ படத்தில் இடம் பெறும் ’’ஆயிரம் நிலவே வா’’ பாடலை படம் பிடிக்க சிட்டி பேலசில் அனுமதி கொடுத்தனர்.

அதன் பிறகு சிட்டி பேலசில் ஷுட்டிங் இந்த படத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள சமோடா அரண்மனையில் தங்கியுள்ளனர்.

வெளி ஆட்கள் யாரும் இங்கே நுழைய முடியாது.

20 நாட்கள் இதுவரை ஷுட்டிங் நடந்துள்ளது. இன்னும் 20 நாட்கள் ஷுட்டிங் இருக்கும்.

கொரோனா விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிப் படப்பிடிப்பு நடக்கிறது.

ஒரு சில நடிகர்களைத் தவிர, படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அனைவருமே 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.