விஜய்சேதுபதியின் ‘கவண்’ டிரைலர்: ஒரேநாளில் 10லட்சம் பேர் பார்த்து சாதனை!

--

மிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன்,  திரையுலக அஸ்டாவதியான  டி.ராஜேந்தரும் இணைந்து நடிக்கும் படம் கவண்.

கேவிஆனந்த இயக்கும் கவண் படம் இந்த மாதம் 31ந்தேதி திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ராஜேந்தர் இருவரும் இணைந்து நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் ப்ரேமம் புகழ் மடோனா செபஸ்டியன் கதாநாயகியாக நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைக்கிறார்.

கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் கவண் படத்தின் போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.  அதைத்தொடர்ந்து இப்படத்தின்  டிரைலரும்  வெளியிடப்பட்டது.

இந்த டிரைலரை  ஒரே நாளில் 10 லட்சம் பேர் பார்த்து சாதனை படைத்துள்ளது.

விஜய்சேதுபதி நடித்து,  இந்த வருடம் ரிலீசாக இருக்கும் 7வது படம் கவண் என்பது குறிப்பிடத்தக்கது.