தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர்.

தற்போது விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார் .
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

இப்படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஜி தமிழ் தொலைக்காட்சி மாமனிதன் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கினால் படத்தின் ரிலீஸ் தள்ளி செல்வதால் OTT தளத்தில் படத்தை வெளியிடுகின்றனர்.

மாமனிதன் படக்குழுவினரும் ஜீ 5 நிறுவனத்திடம் ஆன்லைன் தளத்தில் வெளியிடுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு அந்நிறுவனமும் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.