விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதியின் பிறந்த நாளான  இன்று (ஜனவரி 16ஆம் தேதி)  வெளியிடப்பட்டது.

விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் ‘ஒரு பக்க கதை’  என்ற படத்தை இயக்கினார். இது  தயாராகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வெளியிடமுடியாமல் தடங்கல்கள்.

இந்த நிலையில் புது உற்சாகத்துடன் மீண்டும்  விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை எடுத்து வருகிறார் பாலாஜி தரணீதரன்.

இந்தப் படத்தில் ‘அய்யா’ எனும் நாடக நடிகராக விஜய் சேதுபதி நடிக்கிறார். 30, 50 மற்றும் 75 வயது முதியவர் என மூன்று தோற்றத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.  புகழ்பெற்ற ஹாலிவுட் மேக்கப் மேனான க்ரெக் கெனான் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்.

இவர் இதுவரை சிறந்த மேக்கப் கலைஞருக்காக மூன்று முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: vijay sethupathi's sethupathi first look poster released, விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
-=-