விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நடிகர் விஜய் சேதுபதி  நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான  ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார்.

 

‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா  தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டென் கினோ பிஸ்ட் ( ‘Tyler Durden And Kino Fist’)  மூலம் தயாரித்து வரும் படமான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் கதாநாயகராக விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.  அவருடன்  ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின், மிருணாளினி ரவி ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வலம் வருகிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில்,  பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர், நீலன் கே.சேகர், இயக்குநர்கள் மிஷ்கின் – நலன் குமாரசாமி இணைந்து கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட விஜய் சேதுபதியின் கேரக்டர் (ஷில்பா) லுக் ஸ்டில் மற்றும் சமந்தா கேரக்டர் (வேம்பு) டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி