கிரிக்கெட் : ராகுல், பாண்டியாவுக்கு எதிராக பதிலாக விஜய் சங்கர், சுப்மான் கில்

மும்பை

ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஹரிதிக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது இருவரும் பெண்களைக் குறித்து அவதூறான கருத்துக்கள் கூறியதாக புகார்கள் எழுந்தன. இதை ஒட்டி சமூக ஊடகங்களில் இருவருக்கும் ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜய் சங்கர்

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு இந்த இரு வீரர்கள் குறித்து வெளியிட்ட அரிவிப்பில், “ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் பெண்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சுப்மான் கில்

இது கிரிக்கெட் வாரிய ஒழுக்க விதிகளுக்கு முரணானது என்பதா அவர்களை உடனடியாக இடை நீக்கம் செய்துள்ளோம். இவர்கள் இருவரும் உடனடியாக நாடு திஅரும்ப வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது” என உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது இந்த இருவருக்கு பதிலாக இந்த தொடரில் விளையாட விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இனி ஆஸ்திரேலியா மற்றும் நியுஜிலாந்தில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் பங்கேற்பார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.