‘ஜங்ஷன்:’ வைரலாகும் விஜய் மகன் சஞ்சய் இயக்கி நடித்த குறும்படத்தின் டீசர்!

சென்னை:

டிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய், ‘ஜங்ஷன்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். இதன் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் விஜய்க்கு ஐ.நா. சார்பில் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு சஞ்சய் மற்றும் ஷாஷா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

விஜய்யின் மகனான சஞ்சய் 2009-ல் விஜய் நடித்த `வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறு நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் . ஃபிலிம் மேக்கிங் குறித்து படித்து வந்தார். அவரது படிப்பு முடிவடைந்த நிலையில், குறும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்கேற்றால்போல,  புதிய யூடியூப் சேனல் ஒன்றை சஞ்சய்  துவங்கி உள்ளார். அதில் முதல் வீடியோவாக தான் இயக்கி நடித்த குறும்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ஜங்ஷன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

‘ஜங்சன்’ குறும்படத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/watch?time_continue=23&v=z4_KGClxYBM

 

கார்ட்டூன் கேலரி