லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் பேசியதாவது:

“’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் எனக்கும் உள்ளது. அதுக்கு முக்கியமான காரணம், போன விழாவில் அரங்கிற்கு வெளியே நடந்த விஷயங்கள் தான். இந்த விழாவுக்கே அரைமனதுடன் தான் ஒப்புக் கொண்டேன்.

என்னுடைய படத்தில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. நீ நதி போல ஓடிக்கொண்டு இரு’ என்ற பாடல் இருக்கும். நதி போல ஓடிக் கொண்டு இரு என்பது தான் முக்கியம். கிட்டதட்ட அனைவரது வாழ்க்கையும் ஒரு நதி மாதிரி தான். சில இடங்களில் வணங்குவார்கள். சில இடங்களில் பிடிக்காதவர்கள் கல் எறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரி தாங்க, நம்ம வாழ்க்கையும். நம்ம வேலை, நம்ம கடமை செமயாக செய்துவிட்டு, அந்த நிதி மாதிரியே போய்க் கொண்டே இருக்க வேண்டும். Life is very short Nanba. Always be Happy. டிசைன் டிசைனா problems will come and go, கொஞ்சம் சில் பண்ணும் மாப்பி. அவ்வளவுதாங்க மேட்டர்”என கூறினார் .