மகன் சஞ்சய்யுடன் அமெரிக்காவில் விஜய் ; வைரலாகும் புகைப்படம்…!

அட்லி இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் . இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் யோகி பாபு, விவேக், டேனியல் உள்ப்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் .

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ,இப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் விஜய் . இந்நிலையில் அமெரிக்காவில் படித்து வரும் மகன் சஞ்சய்யை நேரில் சென்று சந்தித்துள்ளார் விஜய் .

அமெரிக்காவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தந்தையும் மகனும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.