மீண்டும் விஜய் ஸ்ரீ – சாருஹாசன் இணையும் தாதா 87 – 2.௦….!

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘தாதா 87’.

தற்போது சாருஹாசனை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ. இந்த படத்துக்கு ‘தாதா 87 – 2.0’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீ யுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்பதிவாளராக கோபி பணிபுரிந்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ‘தாதா 87- 2.0’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது. சாருஹாசன், மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.